24 September 2024

நீர் செய்த நன்மைகள்

நீர் செய்த நன்மைகள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

                   நீர் செய்த நன்மைகள்

                   நினைத்து நினைத்து நான்

                        நன்றி சொல்லி மகிழ்நதிருப்பேன்

 

1.         கொடிய என் குணம் மாற்றினீர்

            கோடிக் கோடி நன்றி ஐயா

            செடியே உம்மில் இணைந்த

            கொடியாய் என்னை மாற்றினீர் - என் தேவா

 

2.         கல்லான இதயத்தை

            இல்லாமல் போகச் செய்தீர்

            கனிவுள்ள இதயம் தந்தீர்

            கர்த்தாவே உம்மை துதிப்பேன் - என்றென்றும்

 

3.         என் பாவ தோஷமெல்லாம்

            சிலுவையில் தீர்த்தீரையா

            சந்தோஷம் பொங்குதையா

            சங்கீதம் பிறந்ததையா - இந்நாளில்

 

4.         ஒன்றுமில்லா ஏழை என்னை

            கண்ணோக்கி பார்த்தீரையா

            என்றும் மாறா உந்தன் அன்பால்

            அணைத்துக் கொண்டீரையா - என் ராஜா

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

சங்கீதசேவை:56 Youtube Link     Text file Download                                  பல்லவி             ஆ...