19 September 2024

நீ நம்பும் தேவன் உன்னை

நீ நம்பும் தேவன் உன்னை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

 

                   நீ நம்பும் தேவன் உன்னை

                        நிழலாய் தொடருவார்

                        நீரை கடக்கும் போதும்

                        நீ நெருப்பை தாண்டும் போதும்

 

1.         சிங்கத்தின் வாயை கட்டிடுவார்

            சீற்றம் அடக்கி காத்திடுவார்

            தங்கம் போல் புடமிட்டு

            தரத்தில் உயர்த்தி உன்னை

            தரணியில் மிளிரச் செய்வார்

 

2.         நெருக்கத்திலிருந்து மீட்டிடுவார்

            நீதிமானாய் மாற்றிடுவார்

            திரும்பவும் வால வயது போலாக்கி

            திருப்தியாக்கிடுவார் - உன்னை

 

3.         கண்ணுக்கு தெரியா காவல் அவர்

            கனலாய் உன்னை சூழ்ந்து கொள்வார்

            முன்னும் பின்னும் அரணாய் நின்று

            முற்றிலும் காத்திடுவார்

 

4.         இல்லை என்று சொல்லிடாரே

            என்றும் உன்னை தள்ளிடாரே

            பிள்ளை என்று சொல்லி தோள்களில்

            சுமந்து உன்னை தாங்கியே நடத்திடுவார்

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...