08 September 2024

நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர்

நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர்

            மீட்படைய நொறுக்கப்பட்டீர்-2

            நீதிமானாக்க பலியானீர்

            நித்திய ஜீவன் தந்தீர்

 

                        அன்பே பேரன்பே

 

1.         காயப்பட்டீர் நான் சுகமாக

            என் நோய்கள் நீங்கியதே

            சுமந்து கொண்டீர் என் பாடுகள்

            சுகமானேன் தழும்புகளால்

 

                        இம்மானுவேல் இயேசு ராஜா

                        இவ்வளவாய் அன்பு கூர்ந்தீர்

 

2.         சாபமானீர் என் சாபம் நீங்க

            மீட்டீரே சாபத்தினின்று

            ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்

            பெற்றுக் கொண்டேன் சிலுவையினால்

 

3.         ஏழ்மையானீர் சிலுவையிலே

            செல்வந்தனாய் நான் வாழ

            பிதா என்னை ஏற்றுக் கொள்ள

            புறக்கணிக்கப்பட்டீரைய்யா

 

4.         மகிமையில் நான் பங்கு பெற

            அவமானம் அடைந்தீரைய்யா

            ஜீவன் பெற சாவை ஏற்றீர்

            முடிவில்லா வாழ்வு தந்தீர்

 

 

https://www.youtube.com/watch?v=2_3SGTUNW6c

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...