நித்திய சீவனின் நினைவெனக் கருளும்

நித்திய சீவனின் நினைவெனக் கருளும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

92. இராகம்: தன்யாசி.                                                                                                            தாளம்: ஆதி

 

                                                பரிசுத்த பேதுருவின் திருநாள் - சூன் 29ஆம் நாள்

 

                   “எத்தனை திரள் என் பாவம்” - என்ற மெட்டு

 

                             பல்லவி

 

                   நித்திய சீவனின் நினைவெனக் கருளும்

                   நிமலா கிறிஸ்து நாதா

 

                             அனுபல்லவி

 

            சித்திய டைந்த சீமோன் பேதுரு திருநாள்

            சீருடன் தொழுதிட ஆலயந் தனில் வந்தோம் - நித்திய

 

                             சரணங்கள்

 

1.         அந்திரே யாவின் சகோதரன் சீமோன்

            ஆண்டவர் கேபா வென்றார்

            முந்திமுந் தியேபேசி, முதல்வனெ னப்பேர் பெற்றான்

            மோட்சாதி தேவசுதன் சீவகி றிஸ்து என்றான் - நித்திய

 

2.         பரலோக இராச்சியத் திறவுகோல் கொடுக்கிறேன்

            பாரினில் நீ எதையும்

            கட்டுதல் கட்டவிழ்த்தல் காரியம் அனைத்தையுந்

            கருத்துடன் செய்வாயென் றுரைத்தனை பரனே - நித்திய

 

3.         என்சகோ தரன் குற்றம் எழுத ரம் செய்தால்

            இரங்கியான் பொறுப் பேனென்றான்

            இயேசுபெருமானே நீர், எழெழுபது தரம்

            இணங்கி மன் னிப்பதுன் கடமை யென் றீரே - நித்திய

 

4.         எல்லாவற்றையும் விட்டோம் என்ன கிடைக்குமென்றான்

            எம்பிரானே நீரும்

            பன்னிரு சிம்மாசனப் பதவியும் ஆளுகையும்

            நூறத்த னைபலனும் நுகர்ந்திடு வீரென்றீரே - நித்திய

 

5.         தேவ நற் கருணையில் சீடரின் கால்களைச்

            சிறப்புடன் கழுவு கையில்

            தேவரீர் என் பதம் தீண்டவும் படுமோ?

            திருச்சித்த மிருந்திடில், தேகமுழுது மென்றான் - நித்திய

 

6.         முன்னவ னைவெறுத்து மூன்றுத ரமறுத்து

            முழு மன துட னழுது

            பின்னவன் குணப் பட்டுப், பெந்தேகோஸ் தாவி பெற்று

            பிரசங்கம் செய்திடப் பெருஞ்சபை தோன்றிற்று - நித்திய

 

7.         இரட்சிப்பின் அதிபதி நிச்சயம் உயிர்த் தெழ

            இராயப்பன் கண்டு தொழ

            பட்சமா யாடுகளைப் பாலிய குட்டிகளை

            இட்டமாய் மேய்ப்பாயாக என்று மொழிந்த கோனே - நித்திய

 

8.         அற்புதம் பேதுரு அனந் தனந்தம் செய்து

            ஆவியின் வரமும் பெற்று

            ஆசியா, பித்தினியா, அந்தப் பொந்து, கலாத்யா

            அட்ட திசையும் சபை அமைத்தனன் துணிவுடன் - நித்திய

 

9.         பெலவீனன் பேதுரு பெலசாலி யாகினான்

            பெரும் இரத்தச் சாட்சி யானான்

            மலைவுறும் ரோமையில், மடிந்தனன் என்றுமே

            மாண்புறு கிளமெண்று வரைந்தனர் நிருபமும் - நித்திய

 

 

- S. உவால்டர் கவிராயர், தென்மலை.

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு