பாடுகள் படிகளாய் மாறுதே
பாடுகள்
படிகளாய் மாறுதே
பாடுகள்
பரிசாய் மாறுதே - 2
1. கடந்து வந்த பாதைகள் கரடான
மேடுகள்
நடக்க முடியா பாதைகள் தனிமையின் பாதைகள்
போராட்டம் சூழ்கையில்
தனிமையில் நடக்கையில்
தேவனை உம்மை சார்ந்து கொண்டேனே - 2
போராட்டம் சூழ்கையில்
தனிமையில் நடக்கையில்
தேவனை உம்மை சார்ந்து கொண்டேனே
2. சிலுவையை சுமக்கிறேன் அனுதினமும் சுமக்கிறேன்
சுமக்க முடியா நேரம் உன் முகம் பார்க்கிறேன்
- 2
சிலுவை சுமந்தவரே எனக்காக வருவீரே
கரம் பிடித்து தூக்கி என்னை பெலப்படுத்துவீரே - 2
3. யாருமே இல்லாமல் போகலாம்
நீர் மட்டும் கூடவே இருக்கிறீர்
என்னை காத்திட தூதரை அனுப்பியே
என் பாதையில் உதவி செய்வீரே - 2
4. சில நேரம் வருகிறீர் மனிதன் மூலமாக வருகிறீர்
முகமோ மனிதன் ஆனால் உள்ளத்தில் நீர்
சில நேரம் வருகிறீர் என் அருகில் அமருகிறீர்
முகமோ மனிதன் ஆனால் உள்ளத்தில் நீர்
கடந்து
செல்லும் வேளையில் பரிசாய் நீர் தருகிறீர்
உலகம்
தரா சமாதானம் தருகிறீர் - 2
பாடுகள்
படிகளாய் மாறுதே
என்
பாடுகள் பரிசாய் மாறுதே...
பாடுகள்
பாதையாகுதே
என்
பாடுகள் பரிசுத்தம் செய்யுதே...
பாடுகள்
பெலனாய் மாறுதே
என்
பாடுகள் பாடல் ஆகுதே...
பாடுகள்
பரலோக வாசலே
என்
பாடுகள் பரலோகம் சேர்க்குதே...
பாடுகள்
பரலோகம் சேர்க்குதே.
- Bro. Sam Sudhan
Comments
Post a Comment