நினைவு கூறும் தெய்வமே நன்றி

நினைவு கூறும் தெய்வமே நன்றி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

            நினைவு கூறும் தெய்வமே நன்றி

            நிம்மதி தருபவரே நன்றி

 

                        நன்றி இயேசு ராஜா

1.         நோவாவை நினைவு கூர்ந்ததால்

            பெருங்காற்று வீசச் செய்தீரே - (அன்று) - 2

            தண்ணீர் வற்றியதைய்யா

            விடுதலையும் வந்ததைய்யா - 2 - நினைவு

2.         ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால்

            லோத்துவை காப்பாற்றினீரே - 2

            எங்களையும் நினைவு கூர்ந்து

            எங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா - 2 - நினைவு

3.         அன்னாளை நினைவு கூர்ந்ததால்

            ஆண் குழந்தை பெற்றெடுத்தாளே - 2

            மலட்டு வாழ்க்கையெல்லாம்

            மாற்றுகிறீர் நன்றி ஐயா - எங்கள் - 2 - நினைவு

4.         கொர்நெலியு தான தர்மங்கள் - ஒரு

            துதனைக் கொண்டு வந்தது - 2

            குடும்பத்தையும் நண்பர்களையும்

            இரட்சித்து அபிஷேகித்தீரே - அவன் - 2 - நினைவு

5.         ராகேலை நினைவு கூர்ந்ததால்

            யோசேப்பை பரிசாய் தந்தீரே - 2

            இன்னுமொரு மகனைத் தருவீர்

            என்றுசொல்லி துதிக்கச் செய்தீரே - 2 - நினைவு

6.         எக்காளம் ஊதும் போதெல்லாம்

            எங்களை நினைக்கின்றீர் - 2

            எதிரிகளின் கையிலிருந்து

            இரட்சித்து காப்பாற்றுகிறீர் - 2 - நினைவு

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

https://www.youtube.com/watch?v=wr5AnLmzLK0

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு