நானே மெய்யான திராட்சை செடி

நானே மெய்யான திராட்சை செடி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

                   நானே மெய்யான திராட்சை செடி

                   கனி தரவே நாம் கொடிகள் என்றார்

                        செழிப்புடன் படர்ந்து ஓங்கிடுவோம்

                        வார்த்தையில் நிலைத்து வளர்ந்திடுவோம்

 

1.         தனித்திடும் கொடியில் கனிகள் இல்லை

            செடியினில் நிலைத்தால் கனிகள் உண்டு

            இயேசுவில் என்றும் நிலைத்திருந்தால்

            குறைவில்லா கனிகள் மிகுந்திடுமே

 

2.         நிறைவுடனே கனிகளை தந்திடவே

            பரிவுடன் அவரே சுத்தம் செய்வார்

            சத்திய உபதேசம் ஏற்பதினாலே

            நித்திய சுத்தம் நிலைத்திடுமே

 

3.         ஆவியின் கனியோ அன்பு சந்தோஷம்

            நீடிய பொறுமை நற்குணமே

            சாந்தம், தயவு, நல் விசுவாசம்,

            இச்சையடக்கம் இவைகளாகும்

 

4.         நன்றியின் ஜீவியம் காத்திடுவோம்

            உதட்டின் கனியை செலுத்திடுவோம்

            இயேசுவின் சொந்த சுதந்திரமாகி

            நீதியின் கனிகளை அளித்திடுவோம்

 

5.         ஆத்தும தரிசனம் கண்டிடுவோம்

            ஆத்தும ஆதாயம் செய்திடுவோம்

            ஜீவிய சாட்சியை காத்திடுவோம்

            உயரிய கனிகள் ஈந்திடுவோம்

 

 

https://www.youtube.com/watch?v=DuG29F5Y6cM

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு