நன்றியால் பாடிடுவேன் நாள்தோறும் பாடிடுவேன்
நன்றியால்
பாடிடுவேன் நாள்தோறும் பாடிடுவேன் - 2
நல்லவர்
என் வாழ்வில் செய்தவைகளை எண்ணி
என்றென்றும்
பாடிடுவேன் - 2
1. கடந்திட்ட நாட்களில் உம் கரமே
என்னை கிருபையால் நடத்தியதே
கலக்கங்கள்
நெருக்கங்கள் சூழ்ந்திட்டது
கர்த்தாவே சுமந்திட்டீரே
களிப்புடன்
உம்மை ஸ்தோத்தரிப்பேன்
என்றும்
கர்த்தா உம் அன்பினையே - 2 - நன்றியால்
2. நெருக்கங்கள் மத்தியில் அழைத்தபோது
உருக்கமாய் இரங்கினீரே
சுகவாழ்வு என்னில் துளிர்விட்டது
புது வழி திறந்திட்டீரே
ஆயிரம் நாவினால் பாடினாலும்
உம் அன்பிற்கு ஈடாகாதே - 2
- நன்றியால்
3. நன்மையால் என் வாயை நிறைத்திட்டீரே
என்றென்றும் பாடிடுவேன்
ஆத்துமாவே நீ ஸ்தோத்தரிப்பாய்
அவர் செய்த நன்மைகட்காய்
ஜீவிய நாளெல்லாம் உம் புகழ் பாடி
நின் பாதம் வந்திடுவேன் -
2 - நன்றியால்
- Apostle John Lazarus
Comments
Post a Comment