அறியாமல் செய்தேனே பாவங்கள், தேவனே,
மன்னிக்க வேண்டுகிறேன் - 2
அளவற்ற அன்பினால் பெரும்பாவி என்னையும்
தயவாக பொறுத்தருளும் - 2 - அறியாமல்
வாழ்க்கையில் இடறல்கள் உண்டு,
உம் கிருபை போதும் என்பேன்
- 2
சிட்சையில் தளராமல் நான் உமக்காக
நடக்க பெலன் தாரும் தேவா -
2
நடக்க பெலன் தாரும் தேவா
1. முள்ளுள்ள இடத்தில் நான் விழுந்தேன்
முட்களின் நெருக்கத்தில் தவிக்கின்றேன்
- 2
முட்களால் காயங்கள் ஏற்ற என் தேவா
நல் விதையாய் எனை மாற்றிடுமே - 2 - வாழ்க்கையில்
2. உலகிற்காய் தினந்தோறும் நடிக்கின்றேன்
உத்தம வேஷம் நான் தரிக்கின்றேன் - 2
உள்ளிந்திரியங்கள் எல்லாம் நீர் அறிவீர்
பரிசுத்தமாய் எனை மாற்றிடுமே - 2 - அறியாமல்
- Dr. A. Pravin Asir
No comments:
Post a Comment