நீங்காத நித்திய கர்த்தத்துவம்
நீங்காத
நித்திய கர்த்தத்துவம்
என்
தேவா உம் மகத்துவம் - 2
ஜனம் எல்லாம் அடி பணியும்
தினம் எல்லாம் சேவிக்கும்
அலை அலையாய் பணிந்தும்மை ஆராதிக்கும்
தம் மொழியாலே துதி பாடிடும்
- நீங்காத
1. தேவா உமது திரண்ட செயல்
எத்தனை ஆச்சரியமே
நித்தம் தேவனை நடத்துகின்ற
அற்புதம் விசித்திரமே
ஆகாய கங்கைதனில் உம் சௌந்தரியம்
அழகாக வெளிப்படுதே - 2 - நீங்காத
2. தேவா உமது வல்லமையால்
என்றென்றும் அரசாளுமே
உதடும் உள்ளமும் துதிக்கையிலே
உம் புயம் வெளிப்படுமே
ஆனந்த உறைவிடமே என் சொந்தமே
நித்திய கன்மலையே - 2 - நீங்காத
3. மலைகள் தகர்த்து பெயர்ந்தாலும்
பர்வதம் விலகினாலும்
உமதருள் நிச்சயம் நீங்காததே
உம் ஒப்பந்தம் நிரந்தரமே
உம் தயவு காருண்யமே நித்தியமே
உம் வாக்கு சத்தியமே - 2
- நீங்காத
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment