24 September 2024

நீர் இல்லாமல் வாழ்வேது

நீர் இல்லாமல் வாழ்வேது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

                   நீர் இல்லாமல் வாழ்வேது

                        நான் உம்மோடு தான் வாழ்வேன்

                        பல துன்பங்கள் வந்து சூழ்ந்தும்

                        நீர் என்னோடு இருந்து காத்தீர்

 

1.         உளையான சேற்றில் வாழ்ந்த என்னை

            தூக்கி எடுத்தீர் நன்றி ஐயா

            பெலவீனன் என்று தள்ளி விடாமல்

            பெலத்தாலே நிறைத்தீர் ஐயா - உம்

 

2.         உலகோடு எனக்கு உறவு இல்லை

            உம்மோடு தான் என் ஐக்கியமே

            எதிர் காலம் எல்லாம் எனக்கு நீரே

            எதிர் பார்ப்பு நிறைவேறுமே - என்

 

3.         உறவுகள் என்னை வெறுத்த நேரம்

            வார்த்தையால் என்னை தேற்றினீர்

            எல்லோரும் என்னை கைவிட்ட நேரம்

            நெஞ்சோடு அணைத்தீர் ஐயா - என்னை

 

4.         அநாதி தேவன் அடைக்கலமானார்

            அவரது புயங்கள் ஆதாரமே

            யார் என்ன செய்தும் என்னென்ன நடந்தும்

            நான் என்றும் அசைவதில்லை - ஐயா

 

5.         எனக்காக யாவும் செய்து முடித்தீர்

            அதற்காக உமக்கு நன்றி ஐயா - என்

            நோய்கள் யாவையும் சுமந்து தீர்த்தீர்

            என் துக்கம் ஏற்றீர் ஐயா

 

 

Youtube

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

சங்கீதசேவை:56 Youtube Link     Text file Download                                  பல்லவி             ஆ...