என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே கர்த்தரை
ஸ்தோத்தரி
கர்த்தர் செய்திட்ட நன்மைகளெல்லாம்
ஒருபோதும் நீ மறந்திடாதே
1. கர்த்தர் ஒருவரே நித்தம் உன்னையே
நடத்தி நடத்தி சுமந்து வந்தார் - 2
கண்ணின் மணிபோல
காத்தருளினார் - (2)
கழுகினைப் போல பறந்திடச் செய்தார் - (2)
- என் ஆத்துமாவே
2. உன்னதமானவர் சர்வ வல்லவர்
தினமும் தினமும் துணை நின்றார் - 2
பறந்து காத்திடும் பறவை போலவே - (2)
பாதுகாத்திட்டார் தமது அன்பினால் - (2)
- என் ஆத்துமாவே
3. பாவ பாரங்கள் முற்றும் நீக்கினார்
பாடிப்பாடி மகிழ செய்தார் - 2
நன்றி சொல்லிடு துதித்துப் பாடிடு - (2)
இயேசு ராஜனை
என்றும் போற்றிடு - (2) - என் ஆத்துமாவே
- Pr. R. Reegan Gomez
https://www.youtube.com/watch?v=aN3wWd25A8A
No comments:
Post a Comment