07 August 2024

விவரிக்க முடியா பூரண அழகை

விவரிக்க முடியா பூரண அழகை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          விவரிக்க முடியா பூரண அழகை

            வர்ணிக்க வார்த்தை இல்லை

            ஆராய்ந்து முடியா அளவில்லா அன்பை

            புகழ்ந்தாலும் போதவில்லை - 2

 

                        அழகில் மிகவும் சிறந்தவரே

                        பழுதே இல்லா பூரணரே

                        உங்க அன்பிற்குள் தொலைந்து போறேன்

                        உங்க நினைப்பால உயிர் வாழ்கிறேன்

                        பூரண அழகே...

 

1.         அன்பென்னும் கயிறினால் இழுத்து கொண்டீர்

            உம் அழகால் என் அவமானங்கள் மாற்றினீர்

            தீராத தயவினால் தழுவிக்கொண்டு

            என் வாழ்க்கையின் ஆதரமாய் மாறினீர்

            என் அருகில் நீர் நெருங்க

            உம் ரூபம் நான் பார்த்து

            என் சாயலும் அழகானதே

            என்னை உமதாக மாற்றினீரே

 

                        அழகில் மிகவும் சிறந்தவரே

                        பழுதே இல்லா பூரணரே

                        உங்க அன்பிற்குள் தொலைந்து போறேன்

                        உங்க நினைப்பால உயிர் வாழ்கிறேன்

                        பூரண அழகே...

 

            அன்பே என் இயேசுவே

            அழகே என் இயேசுவே

            அழகில் நான் மூழ்கி போகிறேன் போகிறேன்

 

 

- Andrew Frank, Isaac D & Miracline Betty Isaac

 

 

https://www.youtube.com/watch?v=EBnJHhhxwRs

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...