உம் வசனம் என் கண்களை திறந்திட்டதே
உம் அன்பு என் உள்ளத்தை குளிர வைத்ததே
- 2
ஆஹா!! என்ன அன்பு இது, மனித அன்பு இல்லை இது
எதிர்பார்க்காத
அன்பு, என் இயேசுவின் அன்பு - 2
1. எலியாவைப் போல் நான் சூரைச் செடியின் கீழ்
கிடந்தேனே
மனித பயத்தினால் அங்கும் இங்கும் அலைத்தேனே
- 2
உம் அன்பிலே பயம் இல்லையே
உம் அன்பினால் பெலன் கொண்டேனே
- 2
2. உதவாத பாத்திரம் என்று எல்லோராலும் நொறுக்கப்பட்டேன்
உடைந்து போன எந்தன் வாழ்வை கன்மலையின்
மேல் நிறுத்தினீரே - 2
உம் அன்பிலே பயம் இல்லையே
உம் அன்பினால் பெலன் கொண்டேனே
உம் அன்பிலே பயம் இல்லையே
உம் அன்பினால் உருவாக்கப்பட்டேன்
- ஆஹா!! என்ன
- Anoya Gopynaarth
https://www.youtube.com/watch?v=URz8xWS5Ov0
No comments:
Post a Comment