ராகம்: “சந்தோஷம் பொங்குதே”
நற்செய்தி கூறுவோம் நற்செய்தி கூறுவோம்
நற்செய்தி
இன்று கூறுவோம் - ஆரிராரோ
இயேசு
இன்று பிறந்தார் என்னை
இரட்சிக்க பிறந்தார்
நற்செய்தி
கூறிடுவோம்
1. நட்சத்திரம் வழி காட்ட சாஸ்திரிகள் முன் செல்ல-2
மேய்ப்பர் வந்து பணிந்தனரே
நானும் பணிவேன் பாலனை -2
நற்செய்தி கூறி இன்று பணிந்திடுவோம் -
ஆமென்
2. பாவத்தில் நான் வாழ்தேன்
பாவியென்னை மீட்க பிறந்தார் -2
அவர் பிறப்பின் செய்தியை கேட்ட நானும்
இன்றுமே
விரைந்து சென்று நற்செய்தி கூறுவோம் -
ஆமென்
3. ஏழையாக பிறந்தவரே இந்த ஏழைக்காக இரங்கிடுவார் -2
நானும் மகிழ்ந்து கூறுவேன் எந்நாளும் கூறி
மகிழுவேன்
இயேசு என்னை இரட்சிக்க
இன்று பிறந்தார்-ஆமென்
ஜெ.
ஜெலின் எமிமா, சுவிசேஷபுரம்
No comments:
Post a Comment