1. நற்கனி தேடிடும் நல்லாண்டவா
நானொரு
பாழ் மரம் என்னைப் பாரும்
வாழ்நாளை வீணாளாய்
கழித்திட்டேனே
வருந்தும் இப்பாவியைக்
கண் நோக்கிடும்
2. மெய்யான திராட்சைச்செடி
யேசுவே
கொடியாக இணைந்திட்ட என்னைப் பாரும்
எப்போதும் உம்மில் நான் நிலைத்திருக்க
தப்பாது கனிதர
அருள் தந்திடும்
3. உம் பணி செய்திட கனிகொடுக்க
எம்மை நீர் அழைத்திப்
தெரிந்து கொண்டீர்
உம் வாக்கை என்னில் நீர் நிறைவேற்றிடும்
உம் சித்தம் நிறைவேற உதவி செய்யும்
4. தினந்தோறும் வேதத்தை விரும்பிடவே
தியானித்து உம்மோடு உறவாடவே
திரளாக உமக்கென்று
கனி கொடுக்க
தினந்தோறும் என்னை நீர் சுத்தம்
செய்யும்
5. என்னை நான் படைத்திட்டேன்
பலிபீடத்தில்
ஏற்று நீர் எடுத்தாண்டு
வழி நடத்தும்
இறுதியில் உம் முகம் தரிசிக்கவே
ஏழையாம்
எனக்கு நீர் அருள்தந்திடும்
No comments:
Post a Comment