09 August 2024

நன்மைகளின் நாயகனே நன்றி

நன்மைகளின் நாயகனே நன்றி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

          நன்மைகளின் நாயகனே

            நன்றி சொல்லி மகிழ்கிறேன்

            உண்மையுள்ள தெய்வமே

            உயிரோடு கலந்தவரே

 

                        நன்மைகளின் நாயகனே நன்றி நன்றி ஐயா!

                        உண்மையுள்ள தெய்வமே உயிரோடு கலந்தவரே

 

1.         கடந்த ஆண்டெல்லாம் (நாட்களெல்லாம்)

            கண்மணிபோல் காத்தீரே

            புதிய ஆண்டு (நாள்) தந்து

            புதியன (புதுமைகள்) செய்பவரே

 

2.         உமக்காய் காத்திருந்து

            புதுபெலன் அடைகின்றேன்

            உம்மையே பற்றிக் கொண்டு

            புதிய மனுஷனானேன்

 

3.         கர்த்தர் கரம் என்னோடு

            இருப்பதை உணர வைத்தீர்

            அநேகர் அறிக்கையிட

            அப்பா நீர் கிருபை செய்தீர்

 

4.         எனக்கு எதிரானோர்

            என் சார்பில் வரவைத்தீர்

            சமாதானம் செய்ய வைத்தீர்

            சர்வ வல்லவரே

 

5.         எப்சிபா என்றழைத்து

            என் மேலே பிரியமானீர்

            பியூலா என்றழைத்து

            மணமகளாக்கி விட்டீர்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

https://www.youtube.com/watch?v=wZlZuVvwE88

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...