13 August 2024

நன்றி சொல்லி பாடுவேன் நாதன் இயேசுவின்

நன்றி சொல்லி பாடுவேன் நாதன் இயேசுவின்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          நன்றி சொல்லி பாடுவேன்

            நாதன் இயேசுவின் நாமத்தையே

            நன்றியால் என் உள்ளம் நிறைந்தே

            நாதன் இயேசுவைப் போற்றிடுவேன்

 

                        நல்லவரே வல்லவரே

                        நன்மைகள் என் வாழ்வில் செய்பவரே

 

1.         கடந்த நாட்கள் முழுவதும் என்னை

            கண்ணின் மணி போல் காத்தாரே

            கரத்தைப் பிடித்துக் கைவிடாமல்

            கனிவாய் என்னை நடத்தினாரே

 

2.         துன்பங்கள் எந்தன் வாழ்வினிலே

            சூழ்ந்து என்னை நெருக்கினாலும்

            கன்மலை தேவன் என்னோடு இருக்க

            கலக்கமில்லை என் வாழ்விலே

 

3.         மேகங்கள் மீது மன்னவன் இயேசு

            வேகம் வருவார் ஆனந்தமே

            கண்ணீர் துடைத்து பலனைக் கொடுக்க

            கர்த்தாதி கர்த்தர் வருகின்றாரே

 

4.         எரிகோ போன்ற எதிர்ப்புகள் எனக்கு

            எதிராய் வந்து எழும்பினாலும்

            சேனையின் கர்த்தர் என் முன்னே

            செல்கிறார் என்று பயப்படேனே

 

 

https://www.youtube.com/watch?v=JQVPvCg-R-Y

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...