13 August 2024

நன்றி சொல்லி பாடிடுவேன் நாள்தோறும்-1

நன்றி சொல்லி பாடிடுவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          நன்றி சொல்லி பாடிடுவேன்

            நாள்தோறும் துதித்திடுவேன்

 

                        நல்லவரே இயேசு வல்லவரே - 2

                        நன்மையால் என்னை என்றும் நிறைப்பவரே

 

1.         உம் அன்பை நினைக்கையிலே

            உள்ளமெல்லாம் உருகுதைய்யா

            உம்மை நான் துதிக்கையிலே

            கள்ளமெல்லாம் நீங்குதைய்யா - நல்லவரே

 

2.         மேடுபள்ளம் கடந்து வந்தேன்

            மேசியா கூட வந்தீர்

            கண்ணீரின் பாதையிலே

            கரம் பிடித்து நடத்தி வந்தீர் - நல்லவரே

 

3.         அற்புதங்கள் அதிசயங்கள்

            என் வாழ்வில் செய்தவரே

            ஆவியின் வல்லமையால்

            அனுதினமும் நிறைப்பவரே - நல்லவரே

 

4.         பரிசுத்த வாழ்க்கையினை

            பரிசாக தந்தவரே

            பரலோக ஆவிதனை

            எனக்குள் வைத்தவரே - நல்லவரே

 

 

https://www.youtube.com/watch?v=ATBL4DijOtQ

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...