03 August 2024

நம்பிக்கையின் தேவனே நான்

நம்பிக்கையின் தேவனே நான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          நம்பிக்கையின் தேவனே

            நான் நம்பும் தெய்வமே

            என்னில் வாழும் இயேசுவே

            உம்மைத்தான் நம்புகிறேன் -2

 

                        எந்த நிலைமையிலும்

                        என் மறுமையிலும்  

                        உம்மையே சார்ந்திருப்பேன் -2

 

1.         நான் தவறும் போதெல்லாம்

            தவழும் பிள்ளையென

            மன்னித்து தோளில் சுமந்தவரே

            உம்மைத்தவிர உம்மைத்தவிர

            யாரை நம்புவேன் யாரைத் தேடுவேன் - எந்த

 

2.         என் வியாதியின் படுக்கையிலே

            என்னைத் தேடி வந்தவரே உம்

            தழும்புகளால் சுகம் தந்தவரே

            உம்மைத்தவிர  உம்மைத்தவிர

            யாரை நம்புவேன் யாரைத் தேடுவேன் - எந்த

 

3.         நான் கலங்கும் போதெல்லாம்

            என் கண்ணீர் துடைத்தவரே

            என் பாரங்கள் ஏற்றுக்கொண்டவரே

            உம்மைத்தவிர  உம்மைத்தவிர 

            யாரை நம்புவேன் யாரைத் தேடுவேன் - எந்த

 

 

- A. Solomon

 

 

https://www.youtube.com/watch?v=JWVws_yipfA

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...