03 August 2024

நம்பிக்கையில் நான் வளர

நம்பிக்கையில் நான் வளர

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          நம்பிக்கையில் நான்

                        வளர வேண்டுமையா - திரு

            நம்பிக்கையில் நான்

                        திகழத் தூண்டுமையா

 

1.         இறைவனாய் படைத்துயிர்

                        அனைத்தையுமே

            நிறைவான ஆற்றலுடன்

                        ஆளுபவர்

            குறையாத அன்புடைய

                        தந்தையவர்

            மறை காட்டும் மாட்சிஇறை

                        மன்னர் தமில்

 

2.         தந்தையருள் திருவாக்காம்

                        இறை மைந்தர்

            வந்துலகில் தூயாவியால்

                        கன்னி மக னாய்

            நிந்தைமிகு சிலுவையில்

                        உயிர் நீத்து

            விந்தை உயிர்த்தேகி பரம

                        தீர்ப்பில் வருவார்

 

3.         புது உண்மை பலகாட்டும்

                        ஆவியரும்

            பொதுவான ஒரே துய்ய

                        திருச்சபையும்

            புதுவாழ்வும் புனிதரின்

                        கூட்டுறவும்

            கதி மன்னிப்புயிர்த்தெழல்

                        உண்டு எனும்

 

 

- அருட்திரு. தாமஸ் தங்கராஜ்

 

 

https://www.youtube.com/watch?v=fTqwbiQOWV8

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...