03 August 2024

நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்

நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

            நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்

            நண்பனே நீ பயப்படாதே

 

                        பயம் வேண்டாம் திகில் வேண்டாம்

                        படைத்தவர் உன்னை நடத்திச் செல்வார்

 

1.         அதிசயர் கல்வாரி சிலுவையிலே

            அனைத்தையும் செய்து முடித்துவிட்டார்

            தழும்புகளால் நீ சுகமானாய்

            தயவினால் மறுபடி பிறந்துவிட்டார்

 

2.         ஆடையைத் தொட்டால் நலம் பெறுவேன் - என்று

            அறிக்கை செய்து சுகமடைந்தாள்

            ஒருத்துளி சந்தேகமில்லாமலே

            ஓடிவா இயேசு இன்றுசுகம் தருவார்

 

3.         ஆபிரகாம் சாராள் குழந்தைப் பெற

            ஆற்றல் பொற்றது நம்பிக்கையினால்

            வாக்குதத்தம் செய்தவர் நம்பத்தக்கவர்

            ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார் - உன்

 

4.         கட்டாந்தரையிலே நடப்பதுபோல்

            கடலைக் கடந்தனர் நம்பிக்கையினால்

            எரிகோ மதில்கள் விழுந்தனவே

            ஏழுநாள் ஊர்வலம் வந்ததினால்

 

5.         உலகிலே இருக்கும் அவனை விட

            உனக்குள் இருப்பவர் பெரியவரே

            துணை நின்று உனக்காய் யுத்தம் செய்வார்

            துரிதமாய் வெற்றி காணச் செய்வார்

 

6.         மலையைப் பார்த்து கடலில் விழு

            என்று சொன்னால் நடந்திடுமே

            உன்னாலே கூடாதது ஒன்றுமில்லையே

            நம்பினால் எல்லாம் நடந்திடுமே

 

பல்லவி

 

                        நம்பிக்கையினால் நாம் வாழ்வு பொறுவோம்

                        நலமுடன் வாழ்ந்து ஜெயம் எடுப்போம்

                        பயம் இல்லையே திகில் இல்லையே

                        படைத்தவர் நம்மை நடத்தி செல்வார்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

https://www.youtube.com/watch?v=CT0vSEIrFh4

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...