08 August 2024

நல்லவர் வல்லவர் நன்மைகள்

நல்லவர் வல்லவர் நன்மைகள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நல்லவர் வல்லவர்

                        நன்மைகள் செய்திடும் நல்லவர்

                        எனக்காய் யாவையும் செய்திடும்

                        இயேசு என்றும் நல்லவர்

 

1.         வசனம் தந்த நல்லவர்

            வாக்கு மாறா வல்லவர்

            எனது கிருபை உனக்கு போதும்

            என்று சொன்னவர் நல்லவர்

 

2.         யாக்கோபின் தேவன் நல்லவர்

            யாபேஸின் தேவன் வல்லவர்

            எலியாவின் தேவன் எலிசாவின் தேவன்

            இன்றும் என்றும் உயர்ந்தவர்

 

3.         குருடர் கண்களை திறந்தவர்

            செவிடர் கேட்டிட செய்தவர்

            கல்வாரி சிலுவையில் தன் ஜீவன் தந்தவர்

            காயங்களால் சுகம் ஆக்குவார்

 

4.         மாராவின் கசப்பை மாற்றியவர்

            மண்ணான என்னையும் நினைத்தவர்

            இரட்சிப்பின் ஆடையும் துதியின் பாடலும்

            இன்ப கானான் அளித்தவர்

 

5.         உனக்கும் எனக்கும் நல்லவர்

            உலகை படைத்த வல்லவர்

            உனக்குள் இருப்பவர் உலகில் உள்ள

            எல்லோரிலும் மிகப் பெரியவர்

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...