நல்லனே வேண்டல் கேள் என் நாயனே
227. இராகம்: சங்கராபரணம் ஏகதாளம்
பல்லவி
நல்லனே, வேண்டல்
கேள்; என் நாயனே,
வல்லனே,
அமிர்த[1] சொல்லின்
வாயனே.
சரணங்கள்
1. அல்லலால் என் உள்ளமே-சில்லப்பட்டு[2] வெள்ளமாம்
தொல்லையில்
அமிழ்ந்திக் கெஞ்சும்கால்
தூக்கிவை கன் மேட்டிலே - நல்
2. சத்துருக்கு நீங்க
நீர்-கொத்தளம் தாகினீர்
பத்திரமாய்
உந்தன் செட்டையில்
நித்தமு மொதுங்குவேன் - நல்
3. கோரிக்கை ஈடேற்றினை;-பாரித்தயை[3] ஊற்றினை!
சீருடன் பிழைக்க என்றுமே
திவ்ய வரம்
தாருமே - நல்
4. கிருபை உண்மை காண்பியும்,
உறுப்பாய் எனை ஸ்தாபியும்
பிரசுரிப்பேன்
நித்தமே - நல்
- தீ. யோசேப்பு
Comments
Post a Comment