பலமும் அல்ல பராக்கிரமம் அல்ல
ஆவியினாலே எல்லாமே ஆகும்
நீர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்
உம்மாலே ஆகாத காரியம் உண்டோ - 2
உலர்ந்த எலும்புகள் உயிருடன்
எழும்பும்
உன்னத சேனையாய் காலூன்றி நிற்கும் - 2
ஊற்றிடுமே உம் வல்லமையை
நிறைவேற்றுமே உம் வார்த்தைகளை
-2 - பலமும் அல்ல
1. உலகமெல்லாம் இனி கலக்கப்படும்
எங்கள் நிழல் பட்டதும் அற்புதங்கள் நிகழும்
- 2
பொய் சிங்கங்களின் வாய்கள் கட்டப்படும்
இருளின் ஆளுகையெல்லாம்
பரிகரிக்கப்படும் - 2 ஊற்றிடுமே
2. கட்டுகளெல்லாம்
நொடியில் அவிழ்க்கப்படும்
சாபங்களெல்லாம்
முற்றும் மாறிப்போகும் - 2
தேவார்த்தை
எங்கும் பிரபலமாகும்
தேவமகிமை என்றும்
வெளியரங்கமாகும்
இயேசுவின் நாமம் எங்கும் பிரபலமாகும்
இயேசுவின் மகிமை என்றும் வெளியரங்கமாகும் - ஊற்றிடுமே
- Pastor. Amos Karthik
https://www.youtube.com/watch?v=o_aZO-zej8o
No comments:
Post a Comment