08 August 2024

உம்மை அப்பா அப்பா என்று கூப்பிடுவேன்

உம்மை அப்பா அப்பா என்று கூப்பிடுவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          உம்மை அப்பா அப்பா என்று கூப்பிடுவேன்

            என் மகனே என் மகளே என்று வந்திடுவீர்

            என்ன வேண்டும் மகனே என்று கேட்டிடுவீர்

            என்ன வேண்டும் மகளே என்று கேட்டிடுவீர்

            என் விருப்பத்திற்கு அதிகமாக செய்திடுவீர் - 2

 

                        எனக்கெல்லாமே நீர்தானப்பா

                        உம்மைப்போல யாரும் இல்லையப்பா

                        எல்லாமே நீர்தானப்பா

                        உம்மைப்போல யாரும் இல்லையப்பா

 

1.         தாய்போல தேற்றுபவரும் நீர்தானய்யா

            என் வேதனை அறிந்தவரும் நீர்தானய்யா - 2

            தாயை போல் அணைத்து முத்தங்கள் கொடுத்து

            மகிழ்ந்திட செய்வதும் நீர்தானய்யா - 2 - எனக்கெல்லாமே

 

2.         தந்தைபோல் ஆற்றுபவரும் நீர்தானய்யா

            என் தவறினை அறிந்தவரும் நீர்தானய்யா - 2

            தந்தைபோல் கடிந்து தவறினை மறந்து

            தோளில் சுமப்பதும் நீர்தானய்யா - 2 - எனக்கெல்லாமே

 

3.         நண்பன்போல் வருபவரும் நீர்தானய்யா

            என் விருப்பத்தை அறிந்தவரும் நீர்தானய்யா - 2

            நண்பன்போல் இருந்து இமைக்காமல் காத்து

            உண்மையாய் உதவுவதும் நீர்தானய்யா - 2 - எனக்கெல்லாமே

 

 

https://www.youtube.com/watch?v=upbOhS3hxMw

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...