03 August 2024

மேகமாய் இரங்கும் பிரசன்னமே

மேகமாய் இரங்கும் பிரசன்னமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   மேகமாய் இரங்கும் பிரசன்னமே

                        மறுரூபமாக்கும் பிரசன்னமே - 2

                        வழிநடத்தும் பிரசன்னமே

                        விலகா தேவ பிரசன்னமே - 2

 

            பெலவீனன் நான் பெலவானென்பேன்

            உந்தன் பிரசன்னம் வருகையில்

            குறைவுள்ளவன் நிறைவாகுவேன்

            உந்தன் பிரசன்னம் வருகையில்

 

                        உந்தனின் பிரசன்னமே போதுமே

                        உள்ளமெல்லாம் உம்மை வாஞ்சிக்குதே - 2

 

1.         வானத்து மன்னாவும், காடையும், தண்ணீரும்

            திரளாய் புரண்டு ஓடினாலும் - 2

                        எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால்

                        பயணம் நிறைவாகுமோ - 2

                        நீர் வாரும் என்னுடன் வாரும்

                        எந்தன் விசுவாச ஓட்டத்தில்

                        முன் செல்லும் என் முன் செல்லும்

                        எந்தன் விசுவாச ஓட்டத்தில்

 

            உந்தனின் பிரசன்னமே போதுமே

            உள்ளமெல்லம் உம்மை வாஞ்சிக்குதே - 2

 

2.         உலக மேன்மையும் ராஜ கிரீடமும்

            சிரசில் அழகாய் ஜொலித்தாலும் - 2

                        எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால்

                        பயணம் நிறைவாகுமோ - 2

                        நீர் வாரும் என்னுடன் வாரும்

                        எந்தன் விசுவாச ஓட்டத்தில்

                        முன் செல்லும் என் முன் செல்லும்

                        எந்தன் விசுவாச ஓட்டத்தில்

 

            உந்தனின் பிரசன்னமே போதுமே

            உள்ளமெல்லம் உம்மை வாஞ்சிக்குதே - 2

 

 

- Evangelist Sam Prasad

 

 

https://www.youtube.com/watch?v=OApO93NICC8

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...