05 August 2024

பலியாகப் படைக்கிறேன் என் இயேசுவே

பலியாகப் படைக்கிறேன் என் இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          பலியாகப் படைக்கிறேன் என் இயேசுவே

            உம் பாதம் வந்தேன் பலியாகவே - 2

                        நிறைவுள்ள பலியோ இல்லை

                        குறையுள்ளோன் தானய்யா

                        நல்லதோர் பலியும் இல்லை

                        கெட்டுப்போன இருதயமய்யா - 2

            இருப்பதை தருகின்றேன் என்னை ஏற்றுக்கொள்ளும் தகப்பனே

            தந்தை என உம்மை அழைக்கும் தகுதியை இழந்து நிற்கிறேன் - 2

                        பரிசுத்தரே பலியானவரே

                        பரிசுத்தரே என் ஆத்தும நேசரே

                        பாவி என் உள்ளத்திலா நீர் வாழ விரும்பினீர் - (2)

 

            ஏன் இந்த அன்பு என் நேசரே

            இன்னுமா பாசம் என் மீதிலே - 2

                        உயர்ந்த ஓர் இடத்தில் வைத்தீர்

                        உம்மை விட்டே ஓடினேன்

                        தாழ்ந்த நிலை வந்த போதும்

                        உம்மை தானே தாழ்த்தி தூற்றினேன் - 2

            எந்த ஒரு சூழலிலும் நீர் என்னை விட்டு விலகவில்லை

            என்னை விட்டு விலகும்படி ஒரு நொடியும் நினைத்ததில்லை - 2

                        பரிசுத்தரே பலியானவரே

                        பரிசுத்தரே என் ஆத்தும நேசரே

                        பாவி என் உள்ளத்திலா நீர் வாழ விரும்பினீர் - 2

 

 

- J Samuel Mighty

 

 

 

https://www.youtube.com/watch?v=deUfsc0ayMs

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...