தொட்டு
தொட்டுப் பார்க்க
எனக்கு ஆசை
இயேசுவை
தொட்டு தொட்டுப்
பார்க்க எனக்கு
ஆசை
ஆசை எனக்கு
ஆசை
இயேசுவை
தொட்டுப் பார்க்க
ரொம்ப நாளா
ஆசை
1. தோமாவைப்
போல தொட்டுப் பார்க்க
ஆசை
மரியாள்
போல தொட்டுப் பார்க்க
ஆசை
நானும்
தொட்டிடுவேன்
காயங்களைத்
தொட்டிடுவேன்
- 2
அவருக்காய்
வாழ்ந்திடுவேன்
- நானும்
ஊழியம்
செய்திடுவேன்
- 2
2. வஸ்திரத்தைத்
தொட்டுப் பார்க்க
ஆசை
சுகம் பெற்று
வாழ்ந்திடவும்
ஆசை
நானும்
தொட்டிடுவேன்
சுகத்தைப்
பெற்றிடுவேன்
- 2
சுகமாய்
வாழ்ந்திடுவேன்
- நானும்
சுகமாய்
வாழ்ந்திடுவேனே
3. அற்புதம்
செய்தவரைத்
தொட்டுப் பார்க்க
ஆசை
அதிசயம்
செய்பவரைத்
தொட்டுப் பார்க்க
ஆசை
நானும்
தொட்டிடுவேன்
அற்புதம்
எனக்குச் செய்வார்
- 2
நிறைவாய்
வாழ்ந்திடுவேனே
- நானும்
நிறைவாய்
வாழ்ந்திடுவேனே
No comments:
Post a Comment