அதிசயங்கள் செய்யும் மகிமையுள்ள
தேவா - (2)
துதிகளை ஏறெடுத்து போற்றிப்
பாடுவேன் - (2)
1. திருமண வீட்டில் தண்ணீரையே
திராட்சை ரசமாக மாற்றினீரே - 2
உம்மை நான் துதித்து மகிமை செலுத்துவேன்
- (2)
2. ஊமையைப் பேச வைத்தவரே
கூனியை நிமிரச் செய்தவரே - 2
உம்மை நான் துதித்து மகிமை செலுத்துவேன்
- (2)
3. குருடரின் கண்களைத் திறந்தவரே
செவிடரைக் கேட்க வைத்தவரே - 2
உம்மை நான் துதித்து மகிமை செலுத்துவேன்
- (2)
4. முடவரை நடக்கச் செய்தவரே
மரித்தோரை உயிருடன் எழுப்பினீரே - 2
உம்மை நான் துதித்து மகிமை செலுத்துவேன்
- (2)
- K. KARTHIKEYAN
No comments:
Post a Comment