என் ஆத்துமா கறையானதே
என் ஆத்துமா கறையானதே
என் சிந்தனைகள்
விசமானதே
என் நாவெல்லாம்
பொய்யானதே
என் இருதயம்
அழுக்கானதே
கழுவும்
உம் இரத்தத்தால்
புதுப்பியும்
உம் ஆவியால்
1. வேண்டாம்
என்று ஒதுக்கிய
பாவத்தை
மீண்டும்
செய்து கசந்துப்போனேன்
- 2
சுத்தமாய்
இருந்த நெஞ்சை
குப்பை மேடாக
மாற்றிவிட்டேன்
என்னை மன்னியும்
தேவா (இராஜா!)
- 2 - கழுவும்
2. கலப்படம்
இல்லாமல் வாழ முயன்றாலும்
வாழ்வின்
சோதனையால்
விழுந்து போனேன்
- 2
மென்மையான
இருதயத்தை எனக்குள்ளே
வைத்திருந்தீர்
என்னையே
அறியாமல் கல்லாய்
மாற்றினேன் - 2
என் ஆத்துமா வெண்மையானதே
என் சிந்தனைகள்
புதுமையானதே
என் நாவெல்லாம்
துதியானதே
என் இருதயம்
அழகானதே -
கழுவினீர்
உம் இரத்தத்தால்
உயிர்ப்பித்தீர்
உம் ஆவியால்
- Ramya
https://www.youtube.com/watch?v=P_mjIpUV25M
Comments
Post a Comment