தேவாதி தேவ சுதன்
103. இராகம்: இந்துஸ்தானி. தாளம்: ஆதி.
புறசாதியாருக்குக் கிறிஸ்து வெளிப்பட்ட நாளாகிய பிரசன்னத் திருநாள்
- சனவரி 6 ஆம் நாள்
“இயேசு கிறிஸ்து நாதர் எல்லாருக்கும் இரட்சகர்” - என்ற மெட்டு
பல்லவி
தேவாதி
தேவ சுதன்
சிறு
பால னாக
வந்தார்.
சரணங்கள்
1. ஏவாளின் பாவத் தாலே,
இருள் நிறைந்த
வுலகம்
சீவாதி பதி
இயேசு, செக
சோதி யாக
வந்தார்.
2. திவ்விய தேசோமய, தேவப்பி ரகா சத்தால்
திறந்தது
வான லோகம் தெரிந்தது
சோதி யுமே
3. எழும்பிப்
பிர காசி; இதோ
உன் ஒளி பாரு
விரும்பியே
கர்த்த ருன்மேல், வெளிச்சம்
உதிக்கச் செய்தார்
4. புறசாதி யாருக் கையன், பொன்
னம்ப லக்காட்
சியாய்
பிர சன்னத்
திரு நாளாய்,
பெரிய இரட்
சிப்பாய்
வந்தார்
5. கிழக்கத்தி
சாத்தி ரிகள், கிறிஸ்து
பிறந்த போது
வழக்க மில்லாத
வெள்ளி, வானில்
உதிக்கக்
கண்டார்.
6. கண்டவ ரெழுந்
துமே, கானான்
தேசமே சென்று
கர்த்தாதி
கர்த்தனுக்குக்
காணிக்கை தான்
படைத்தார்.
7. படைத்தார்கள்
பொன்னையும், பச்சைத் தூப வர்க்கமும்
பாங்குடன்
வெள்ளைப் போளம்,
பாளம் பாளமாய் வைத்தார்.
8. வைத்தார்
சரீரமே வாழை
வெட்டிச் சாய்த்
தாற்போல்
சாஷ்டாங்க
தெண்டனிட்டு,
சாத்திரிகள்
கும்பிட்டார்.
9. சோதிட சாத்திரிகள்,
தொழுது பணியுங்
கோனே
பாவிக ளெங்க
ளுள்ளம் பரிசுத்த
மாகச் செய்யும்.
- S. உவால்டர்
கவிராயர்,
தென்மலை.
Comments
Post a Comment