தேன் தமிழில் பாட்டெடுத்து

தேன் தமிழில் பாட்டெடுத்து

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   தேன் தமிழில் பாட்டெடுத்து

                        தேவா உன்னைப் பாடுகின்றேன்

                        தேடி வந்த தெய்வம் நீரே

                        தினந்தோறும் வாழ்த்துகிறேன் உம்மை

 

1.         நான் வாழுகின்ற வீடவரே

            நான் உண்ணுகின்ற உணவவரே

            நான் அருந்தும் நல் நீரே தேவா

            வருகின்றேன் வாழ்வளியும்

            தருகின்றேன் ஏற்றருளும்

 

2.         என் வாழ்வினிலே விடியவில்லை

            என் பயணமதும் முடியவில்லை

            தினந்தோறும் சாகின்றேனே தேவா

            மண்ணானேன் மரமாக்கும்

            வெயிலானேன் நிழலாக்கும்

 

3.         என் வியாதியிலே வாடுகின்றேன்

            என் படுக்கையிலும் பாடுகின்றேன்

            பிணி தீர்க்கும் நல் மருந்தே தேவா

            வார்த்தையதை அனுப்பிடுமே

            வாதையதை போக்கிடுமே

 

 

- Bro. A. Thomas

 

 

https://www.youtube.com/watch?v=y6Rspl4uH8o

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு