தேவாதி தேவன் இன்றுயிர்த்தார்

தேவாதி தேவன் இன்றுயிர்த்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

25. இராகம்: இந்துஸ்தானி                                 (382)

 

                             பல்லவி

 

                   தேவாதி தேவன் இன்றுயிர்த்தார்

 

                             சரணங்கள்

 

1.         தேவாதி தேவன் றன் நேய குமாரன்,

            ஜீவரட்சண்ய உபகாரன், ஏசு - தேவாதி

 

2.         அதிமகி ழொடு கன சுரர் துதிபாட

            அடியர்களும் மகிழ் கொண்டாட, ஏசு - தேவாதி

 

3.         சீறும் அலகை சிரமுடைத்ததி திடமாய்

            தீயர் கதியடைய இடமாய், ஏசு - தேவாதி

 

4.         சாபம் அற்றிடவே, ஜீவன் உற்றிடவே,

            சாவதின் கூருமொடிந்திடவே, ஏசு - தேவாதி

 

5.         சீஷரை யாற்றி, மாசற்றத் தேற்றி

            தேவ நெறியை நிறைவேற்றி, ஏசு - தேவாதி

 

6.         மனத்துயர் தரித்தோர் மரத்தினில் மரித்தோர்

            மாஜெயங் கொண்ட அதிபனானார், ஏசு - தேவாதி

 

- ஜா.பா

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு