கர்த்தர் பெரியவர் அவர் நமது
386. இராகம்: சங்கராபரணம் ஆதி தாளம்
பல்லவி
கர்த்தர்
பெரியவர் அவர்
நமது
தேவனுடைய
நகரத்திலும்
நமது பரிசுத்த
பர்வதத்திலும்
மிகத் துதிக்கப்படத்
தக்கவர்.
சரணங்கள்
1. வட திசையிலுள்ள
சீயோன் பர்வதம்
வடிப்பமான
ஸ்தானமும்;
சர்வ பூமியின்
மகிழ்ச்சியாய்
இருக்கிறது
அது மஹா ராஜாவின்
நகரம் - கர்த்
2. அதின் அரண்மனையில்
தேவன் உயர்ந்தவராய்
அடைக்கலமாக
அறியப்பட்டார்
இதோ ராஜாக்கள்
ஏகமாய் கடந்து
வந்து
அதைக் கண்டு
விரைந்தோடினர்
3. தேவனே உமது
ஆலயம் நடுவில்
உம்முடைய
கிருபையைச்
சிந்தித்துக்
கொண்டு இருக்கிறோம்,
உம் நாமம்
விளங்குகிறது
- கர்த்
4. உமது நியாயத் தீர்ப்புகளின்
நிமித்தம்
சீயோன்
பர்வதம் மகிழ்வதாக
உம் வலக்கரம்
நீதியால் நிறைந்திருக்க
யூதா
குமாரத்தி களிகூருவாள்
5. இந்த இயேசு
தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும்
நமது தேவன்
மரண பரியந்தம்
நம்மை நடத்திடுவார்
நித்திய
மகிமையில் சேர்த்திடுவார்
- சாராள்
நவரோஜி
https://www.youtube.com/watch?v=CLNX_RE-9NA
Comments
Post a Comment