20 June 2024

தேற்றரவாளனே ஆறுதல் தாரும்

தேற்றரவாளனே ஆறுதல் தாரும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   தேற்றரவாளனே ஆறுதல் தாரும்

                        சமாதான பிரபுவே சமாதானம் தாரும்

                        ஆறுதல் தாரும் அன்பனே தேற்றும்

                        என் தேவனே

 

1.         கவலைகளை கரைந்து போக பண்ணுகிறீரே

            காட்டுப் புஷ்பங்களைப் பார்க்கச் சொன்னீர்

            கவலைகள் அதுக்கு உண்டோ என்றீர்

            துக்கங்களை துடைத்து விட்டீரே

            தூயாதி தூயவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

 

2.         உம்மிடத்தில் நான் பாரத்தை

            எல்லாம் வைத்து விட்டேனே

            ஆதரிக்கும் என் ஆண்டவரே

            அற்புதம் செய்திடும் அற்புதரே

            மன துயரை மறையச் செய்தீரே

            மன்னாதி மன்னவரே

            ஸ்தோத்திரம் தோத்திரமே

 

3.         கண்ணீரை துடைத்து

            களிப்பை உள்ளத்தில் தருகின்றீரே

            கல்லான மனதை சதையாக மாற்றி

            காலமெல்லாம் ஆசி தந்திடுவீரே

            கலக்கங்களை களிப்பாக மாற்றினீரே

            கர்த்தாதி கர்த்தரே

            ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...