14 June 2024

தேவா உம்மை நான் நம்புவேன்

தேவா உம்மை நான் நம்புவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                    தேவா உம்மை நான் நம்புவேன்

                        அதிகாலை தேடினேன்

                        தேவனே இவ்வேளையில்

                        நீங்கா உமது கிருபை பொழியும்

 

1.         காலை தோறுமே உந்தன் கிருபை புதியதே

            தேவனே உம் சாயலால் திருப்தியாக்கிடும்

 

2.         காலை விழிப்பினால் உந்தன் நேச மொழியதை

            கேட்டுமே இந்நாளெல்லாம் மகிழச் செய்யுமே

 

3.         கடந்த இராவினில் எம்மைக் காத்தா இயேசுவே

            படைக்கிறேன் இக்காலையில் கிருபை தாருமே

 

4.         தாகம் தீர்த்திடும் நல்ல ஜீவ தண்ணீரே

            உந்தன் பாதம் அமர்ந்துமே தியானம் செய்குவேன்

 

5.         மீட்பர் இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே

            நாளெல்லாம் உம் பாதையில் செல்ல நடத்துமே

 

 

https://www.youtube.com/watch?v=qHBXkbSFZ3s

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...