தேற்றரவாளன் இயேசுவே என்னை

தேற்றரவாளன் இயேசுவே என்னை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தேற்றரவாளன் இயேசுவே

                        என்னை தேடி வந்த அன்பு தெய்வமே

                        தாயைப் போல தேற்றுகின்றீர்

                        தந்தைப் போல தோளில் சுமக்கின்றீர்

                        நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா

 

1.         வனாந்திரமான வாழ்க்கையிலே

            வழியின்றி தவிக்கும் நேரத்திலே

            பகைவர்கள் சூழ்ந்திடும் நேரத்திலே

            கடலினில் தரைவழி வந்தவர் நீர்

            நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா

 

2.         இருண்ட வாழ்க்கை பாதையிலே

            இன்னல்கள் சூழ்ந்த நேரத்திலே

            இரவிலும் பகலிலும் நீர் எனக்கு

            அக்கினி ஸ்தம்பம் மேகஸ்தம்பம்

            நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா

 

3.         மனுஷரின் வார்த்தைகள் மாராவாகி

            மனதினில் துயரங்கள் சூழ்கையில்

            மாராவின் கசப்பை மதுரமாக்கி

            மகிமையின் வார்த்தையால் மகிழ்ச்சி தந்தீர்

            நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா

 

 

- Denmark Balasubramaniyam

 

 

https://www.youtube.com/watch?v=TuJAgaiVheA

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு