தேவாதி தேவன் மகத்துவத்தை

தேவாதி தேவன் மகத்துவத்தை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

34. இராகம்: சங்கராபரணம்                                 ஏகதாளம் (386)

 

                             பல்லவி

 

          தேவாதி தேவன் மகத்துவத்தை-ஆத்மமே

          ஆவலாய் த்யானி, அன்பின் கிருபை மயமே.

 

                             அனுபல்லவி

 

            ஏகோவா வெனும்-ஏக சக்ராதிபதி

            என்றென்றும் பரிசுத்த-ரெனப் போற்றும் மோக்ஷபதி - தேவா

 

                             சரணங்கள்

 

1.         அண்ட சராசரம் யாவும் சிருஷ்டித்தவர்

            அளவுக் கெட்டாச் சர்வ - ஞானமிகுந்தவர்

            தொண்டர் ரஷைக் காய்ச் சுதனை விடுத்தவர்

            தொல்புவியோர்-மோஷம் பெறப் பாதை காண்பித்தவர் - தேவா

 

2.         நேற்று மின்று மென்றும் மாறாத் தன்மையோன்,

            நேர்மை பிசகாதோர்க் கானந்த வாய்மையோன்,

            வேற்றுமையின் நிழல் தோன்றாத் தூய்மையோன்,

            வேண்டிக்கொள்வோர்க் கருளேராளமாய்ப் பொழிவோன் - தேவா

 

3.         அலகைக்[1] காளாகாம லருமை மைந்தனை விட்

            டன்பா யெமை மீட்ட எ பரனே ஸ்துதி

            உலகில் யாம்பிழைத் தசைவதும் முடிவில்

            உம்பரோ[2] டின்புற் றோசன்னா சொல்வதும் கதி - தேவா

 

 

https://www.youtube.com/watch?v=ZNS1wGFgf4E

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] பேய்

 

[2] வானோர்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு