26 June 2024

தோத்திரப் பலிகளை செலுத்துவோம்

தோத்திரப் பலிகளை செலுத்துவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   ஸ்தோத்திரப் பலிகளை செலுத்துவோம்

                        ஆத்துமாவின் நேசரை புகழ்த்துவோம்

                        (புனிமாய் 2) கனிவுடன் கரம் உயர்த்தி

                        கர்த்தரை உயர்த்துவோம்

 

1.         உதட்டின் காளை உன்னதர்க்களிக்கிறோம்

            உத்தம இருதயம் படைக்கிறோம்

            (முற்றுமே 2) குற்றமற்றதாக

            எம்மை சுத்தமாக வைக்கிறோம்

 

2.         பங்கமின்றி தாசரெம்மை காத்ததால்

            துங்கனேசு தூய்மை நமக்கு ஈந்ததால்

            (மகிமையே 2) நீங்கிடாதிருந்து

            நம்மை தீங்கினின்று மீட்டதால்

 

3.         பரிசுத்தம் செய்யும் பலி ஆயினார்

            தரிசிக்க தம்மை வழி காட்டினார்

            (கனிவுடன் 2) பாரிசத்திருந்தெமக்காய்

            பரிந்து பேசுகின்றார்

 

4.         சீயோனின் துதிகளை திரட்டுவோம்

            தீயோனின் மதில்களை புரட்டுவோம்

            (ஸ்திரமுடன் 2) லேகியோன் படைகளை

            எதிர்த்து நின்று விரட்டுவோம்

 

5.         ஓய்வில்லாத ஸ்தோத்திரங்கள் சாற்றியே

            பேய் பிசாசின் அஸ்திரங்கள் அழித்துமே

            (தூயனை2) தூய்மையுடன் போற்றி

            சுவிசேஷமதை சாற்றுவோம்

 

 

- Rev. K Jebamani Yesudass

 

 

https://www.youtube.com/watch?v=Xk7wVhU_uIs

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...