13 June 2024

சேர்வதெப்போது பாவி சொர்க்க இன்பத்தை

சேர்வதெப்போது பாவி சொர்க்க இன்பத்தை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

இராகம்: மோஹனம்                                          தாளம்: ஆதி

 

                                    பல்லவி

                   சேர்வதெப்போது பாவி - சொர்க்க இன்பத்தை

                        சேர்வதெப்போது பாவி - மோட்ச இன்பத்தை

                        சேர்வதெப்போது பாவி?

 

                             சரணங்கள்

 

1.         ஞாலத்தில் வந்த குருநாதனைப் பணியாமல்

            காலமிருக்குதென்று கவலையற்றிருந்தால் - சேர்வதெப்போது

 

2.         அக்ஷயன் இயேசுவின் பக்ஷமதை மறந்து

            இரக்ஷையைத் தள்ளி துர் இச்சையில் திரிந்தால் - சேர்வதெப்போது

 

3.         பாவப் பாரஞ் சுமந்து பரிதவிக்கும் பாவியைக்

            கூவி அழைத்து நிற்கும் காவலனை விட்டால் - சேர்வதெப்போது

 

4.         திருக்கு முறுக்குப் பண்ணும் செருக்குள்ள நெஞ்சத்தைதான்

            உருக்கமுள்ள இயேசுவின் திருக்கரம் வையாவிடில் - சேர்வதெப்போது

 

5.         உள்ளத்தைத் திறந்து நீ உண்மையை அறியாமல்

            கள்ளத்தனம் பண்ணிக் காலத்தைக் கழித்தால் - சேர்வதெப்போது

 

6.         இரட்சகர் வந்துன்னை இரட்சிக்க நிற்கும்போது

            கட்சி பண்ணிக்கொண்டு துஷ்டனாக அலைந்தால் - சேர்வதெப்போது

 

 

 

https://www.youtube.com/watch?v=wWDlWAE57Ek

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...