தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு

தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு

            (என்) தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு - 2

            பாரபட்சம் பார்க்காத தயவு

            எளியவனை உயர்த்தி வைக்கும் தயவு

            தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு

 

                        உங்க தயவு பெரியதே

                        உங்க தயவு சிறந்ததே

                        உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே

                        ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே

 

1.         (எனை) குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள்

            திசை மாறி போக செய்த தயவு பெரியதே - 2

            ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தை

            தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதே

            இந்த தயவை பாட ஜீவன் உள்ளதே - உங்க தயவு

 

2.         சுற்றி நின்ற ஜலங்கள் எல்லாம் அமிழ்ந்து போனதே

            என் பேழை மட்டும் பத்திரமாய் மலையில் நின்றதே - 2

            மூழ்கும் என்று எதிர்பார்த்த கண்கள் தோற்றதே

            ஏறெடுத்து பார்க்கும் வண்ணம் உயர்த்தி வைத்ததே

            என்னை உயர உயர கொண்டு செல்லுதே - உங்க தயவு

 

 

- Rev. John Jebaraj

 

 

https://www.youtube.com/watch?v=_4MpK-KlLhw

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு