15 June 2024

ஆனந்த புகலிடமே எந்தன் இயேசையனின்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                             பல்லவி

 

          ஆனந்த புகலிடமே எந்தன் இயேசையனின் காயங்கள்

            உன்னத அடைக்கலம்

 

                             அனுபல்லவி

 

                        எங்கெங்கோ தேடினேன்

                        ஒதுக்கிடம் காணேன்

                        செங்குருதி சிந்திய இரட்சகனில் கண்டேன்

 

                             சரணங்கள்

 

1.         பாய்ந்திடும் வேங்கையிடம்

            சிக்கிய மானைப்போல்

            பாதக பவப்பொறியில்

            சிக்கினேன் தப்புவித்தார் - 2

            உள்ளங்கைகளிலே வரைந்தார்

            என்னைப் பொதிந்தார்

            கருணைத் தோள்களிலே

            சுமந்தார் அகமகிழ்ந்தார்

 

2.         சீறிடும் புயலினிலே

            தவித்திடும் பறவையைப் போல்

            மீறிடும் பவப்பிழைகள்

            சூழவே நிலைக்குலைந்தேன் - 2

            கண்ணீருடன் கதறி

            பரமன் சரண் புகுந்தேன்

            செந்நீர் கரங்கள் எனை

            கழுவ மீட்படைந்தேன்

 

1.         சா ரீ கா மா பா தா

            சரிகமபா ரிகமப ச்நிதபம

            ஆனந்த புகழிடமே

 

2.         பமகரி சரிகம பதபமபா

            பதநீ தபம க்ரிச்நீதபம

            ஆனந்த புகழிடமே

 

3.         பத பபபாத பத பபபாதா பத

            பதநிச் நிதபம சரிகமபா

            நிநிநீச் நீச் நிநீ நீச் நிச் 

            நிச்க்ரிச்நிதப மபதநிச்

            ச்க்ரி... நிரீச் ....தநித ....பதப...

            ச்க்ரி ..நிரீச்.. தநித ..பதப ..

            ச்க்ரி நிரீச் தநித பதப பமகம - ஆனந்த

 

 

- Rev. Dr. S. Rajendran

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...