20 June 2024

தொட்டு சுகமாக்குமைய்யா இயேசுவே

தொட்டு சுகமாக்குமைய்யா இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   தொட்டு சுகமாக்குமைய்யா இயேசுவே

                        நீர் தொட்டால் போதும்

                        எந்தன் வாழ்க்கை மாறுமே

 

1.         எட்டிக்காய் போல் கசக்கும் எந்தன் வாழ்க்கையை

            உம் பாசக் கைகள் நீட்டி இன்று தொடனுமே

            கட்டிப் பிடித்தேன் உந்தன் பாதம்

            கர்த்தர் எந்தன் கதறல் கேளும்

            தொடனுமே என்னை தொடனுமே

 

2.         கடனும் முடனும் என்னை முடக்க முடியாதே

            கடல் மேல் நடந்த கர்த்தர் என்னோடிருக்கின்றார்

            கடல் மேல் என்னை நடக்கச் செய்வார்

            கடனை எல்லாம் மாறச் செய்வார்

            மாறுமே எல்லாம் மாறுமே

 

3.         குறைவை எண்ணி புலம்புவதை நிறுத்துவேன்

            நிறைவாய் என்னை நடத்துபவர் இருப்பதால்

            இல்லை என்பது எனக்கு இல்லை

            தொல்லை என்பது துளியும் இல்லை

            இல்லையே தொல்லை இல்லையே

 

 

https://www.youtube.com/watch?v=YJqsknMTV0A

https://www.youtube.com/watch?v=1dzqahFzpQw

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...