தேவா பர தேவா ஓ ஏ

தேவா பர தேவா ஓ ஏ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

17.   இராகம்: காம்போதி.                                             சாப்புதாளம் (379)

 

                             பல்லவி

 

                   தேவா, பர தேவா, ஓ! யே

                        கோவா, எனைக் கா, வா.

 

                             அனுபல்லவி

 

            கா, வா, எனை, இக்காலையில் எழுந்து,

            கண் பார்த்தென் மேல் கருணை புரிந்து - தேவா

 

                             சரணங்கள்

 

1.         கடந்த இரா அந்தகாரம் பின் வாங்க,

            காலை ஒளி கண்ணுறக் காத்தெனை ஓங்க,

            உடந்தையாக என்னை உரித்துடன் தாங்க,

            உன்அருள் புரி இடையூறுகள் நீங்க, - தேவா  

 

2.         பாவம் பசாசுலக பாசம் விட்டோட,

            பரலோக வாழ்வினைப் பத்தியாய்த் தேட

            பூவில் விசுவாசப் போராட்டம் ஆட,

            புண்ணியன் உன்னையே போற்றி மன்றாட; - தேவா

 

3.         இந்த நாளில் அடியேன் எழுந்து பணிகள் ஆற்ற,

            ஏற்ற சவுக்கியம் பெலன் என்னிடம் தோற்ற,

            வந்தருள் உன் திரு வசனமே சாற்ற,

            வரம் அளித்திட உன்னை வாழ்த்தியே போற்ற; - தேவா

 

4.         இந்நிலந் தன்னிலே, இறைவா, நீ மாத்திரம்

            ஏத்தித் தொழும் மகிமை ஏற்றிடப் பாத்திரம்;

            உன் இடந்தான் நோக்கும் ஊன்றி என் நேத்திரம்,[1]

            ஓதிடுவேன் என்றும் உமக்கே மா தோத்ரம். - தேவா

 

- ஜாண் பால்மர்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] கண்மணி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு