17 June 2024

தேவாதி தேவன் இயேசுவைப் போற்றி

தேவாதி தேவன் இயேசுவைப் போற்றி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   தேவாதி தேவன் இயேசுவைப் போற்றி

                   என்றென்றுமாய் வாழ்த்துவோம்

                        அல்லேலூயா அல்லேலூயா

 

1.         காலமெல்லாம் அவரின் பின்னே

            தொடர்ந்து சென்று பணிகுவோம்

            துதியினாலே மகிமைப்படுத்தி

            துதிப்போம் இவரை என்றுமாய்

 

2.         தடைகள் யாவும் நீக்கும் தேவன்

            பணிந்து இவரை போற்றுவோம்

            தீமை ஒன்றும் அணுகிடாமல்

            விலக்கி காக்கும் தேவனாம்

 

3.         ஏற்ற வேளை உயர்த்தும் தேவன்

            அவரின் கரத்தில் அடங்குவோம்

            தேவ வழியில் சென்று நாமே

            தேவன் இவரை புகழுவோம்

 

4.         மகிமை தேவன் தமது சபையை

            வானில் சேர்க்க வருகிறார்

            தூய்மை காத்து ஆயத்தமாக

            அன்பர் இவரை உயர்த்துவோம்

 

5.         பாதுகாத்த தயவை எண்ணி

            பாரில் இவரை உயர்த்துவோம்

            மகிமை நாமமுடைய தேவன்

            பூவில் இவரை உயர்த்துவோம்

 

 

https://www.youtube.com/watch?v=iPTGZwhQgXg

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...