தேவை நிறைந்தவர் இயேசு தேவா

தேவை நிறைந்தவர் இயேசு தேவா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                                    பல்லவி

 

          தேவை நிறைந்தவர் இயேசு தேவா

            வல்லமை தந்திடுமே - 2

 

                             அனுபல்லவி

 

                        தேவைகள் சந்திக்க ஏற்றதோர் வல்லமை - (2)

                        வேளையில் தந்திடுமே - இந்த

                        வேளையில் தந்திடுமே - 2

 

                                    சரணங்கள்

 

1.         நாடுகள் அனைத்திலும் அமைதியே இல்லை

            வல்லமை தந்திடுமே - 2

            திறப்பின் வாசல் நின்று களைப்பின்றி புலம்பபிட - (2)

            எங்களை எழுப்பிடுமே - தேவா

            வல்லமை தந்திடுமே - 2 - தேவை

 

2.         தேவை மிக்க ஒரு நாட்டினைத் தந்தீர்

            வல்லமை தந்திடுமே - 2

            எத்தனை மதங்கள் எத்தனை தெய்வங்கள் - (2)

            'கர்த்தரே தெய்வம்' என்றே - காட்ட

            வல்லமை தந்திடுமே - 2 - தேவை

 

3.         நித்திய நாட்டிற்கு மக்களைச் சேர்க்க

            வல்லமை தந்திடுமே - 2

            நிலையில்லா உலகில் நிலைத்திடும் சேமிப்பு - (2)

            ஆத்துமாக்கள் மட்டுமே - தேவா

            வல்லமை தந்திடுமே - 2 - தேவை

 

 

- எமில் ஜெபசிங் (1940-2013)

 

 

https://www.youtube.com/watch?v=5mI3yMd9_IA

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு