தேவா உந்தன் சமுகமே

தேவா உந்தன் சமுகமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   தேவா உந்தன் சமுகமே

                        தேவ சாயலாக்குமே

                        தேவா உம்மைகண்டு கண்டு

                        உம்மை போல மாறிடுவேன்

 

1.         இரத்தத்தினாலே கழுவிடும்

            இரட்சிப்பினாலே மூடிடும்

            பாவங்கள் அறவே கழுவி கழுவி

            பரிசுத்தர் போல ஆகுவேன்

 

2.         பரிசுத்த ஆவியால் நிரப்பிடும்

            பரவசமாகி மகிழ்ந்திட

            தேவனின் சமுகத்தில் நிரம்பி நிரம்பி

            தேவனைப் போல ஆகுவேன்

 

3.         பரிசுத்தவான்களின் பட்டியலில்

            பரமனே எனக்கோர் இடமளியும்

            பணிந்து குனிந்து பாதம் சேர்ந்து

            பரமனைப் போல ஆகுவேன்

 

4.         வீழ்ந்த என்னை தூக்கிடும்

            தாழ்ந்த என்னை உயர்த்திடும்

            நெகிழ்ந்திடாது நித்தியம் சேர

            நிர்மல நாதா அருள் செய்யும்

 

 

https://www.youtube.com/watch?v=YzUy3LCdUpA

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு