தோத்திரம் பாடுவோம் இயேசுவை

தோத்திரம் பாடுவோம் இயேசுவை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   தோத்திரம் பாடுவோம்

                   இயேசுவை போற்றுவோம்

                        எல்லாம் கிடைக்குமே

                        உலகில் எதுவும் நடக்குமே

                        வேதனை தீருது வெற்றி கிடைக்குது

                        ரட்சகர் பார்வையிலே

                        இயேசு ரட்சகர் பார்வையிலே

                        என்ன துன்பம் வந்தாலும்

                        கவலையில்லையே

                        என் தேவன் துணையிருக்க

                        கலக்கமில்லையே கர்த்தர்

                        கரமிருக்கையிலே

 

1.         வேதனையும் சோதனையும் நீக்கிடுவாரே

            வியாதியை போக்கிடுவாரே

            இனிதான சந்தோஷம் தந்திடுவாரே

            இயேசு செய்திடுவாரே

            உன்னத பெலத்தால்

            உள்ளமதை நிறைத்தார்

            உண்மையிலே அவர் தான்

            மரணத்தை ஜெயித்தார்

 

                        ஒளியானார் வழியானார்

                        நம் வாழ்வின் துணையானார்

 

2.         உலகத்தின் செல்வமெல்லாம் நிலையாகுமா

            அது உன்னைக் காக்குமா

            உற்ற துணை இயேசுவைப் போல்

            சுகமாகுமா நல் உறவாகுமோ

            இஸ்ரவேலை காக்கும் இம்மானுவேல்

            உறங்கவில்லை

            இமைபோல் நம்மை காக்க

            இயேசுவைப் போல் யாருமில்லை

            இருள் நீக்கும் இதய தெய்வம்

            இயேசுவையே நீ பாடு

 

3.         தாவீதின் தேவன் நம்மை தாங்கிடுவாரே

            வழி நடத்திடுவாரே

            தந்தையைப் போல் தோள் மீது

            சுமந்திடுவாரே பாவம் போக்கிடுவாரே

            சிலுவை நாதர் நிழலில்

            சிரமம் ஏதும் இனியில்லை

            சீக்கிரமாய் வருவார் ஆயத்தம் ஆகிடுவோம்

            அருள் நாதர் அன்பை எண்ணி

            அல்லேலூயா பாடிடுவோம்

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு