19 June 2024

எத்தனை தூரம் வருவீர் காப்பாற்ற

எத்தனை தூரம் வருவீர் காப்பாற்ற

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          எத்தனை தூரம் வருவீர் காப்பாற்ற

            எவ்வளவு மைல் நடப்பீர் கரைசேர்க்க

            மறந்தாலும் உம்மை மறுதலித்தாலும்

            உம்மை தேடாமல் உலகத்தை தேடி அலைந்தாலும்

 

            நீர் நீரே ஆண்டவரே என்னை மன்னியும் ஆண்டவரே

                        பாவத்தை வெறுத்த நீர் பாவி என்ன வெறுக்கலையே

                        கோபித்தாலும் நீர் என் அப்பா என்று அறிவித்தீரே - 2

 

            உம் சித்தம் செய்ய எனக்கு இன்னொரு வாய்ப்புத் தாரும்

            உம் துணையோடு இந்த உலகத்தை ஜெயிக்கனுமே - 2

 

1.         மந்தை விட்டே விலகிச் சென்றேன்

            தேடி வந்து என்னைத் தோளில் சுமந்தீர் - 2

            கோபத்தில் இருப்பீர் என்று பயந்து இருந்தேன் - 2

            வறுத்தத்தோடு இருந்தீரே அணைத்து முத்தமிட்டீரே - நீர்

 

2.         குழப்பங்களால் குழம்பி நின்றேன்

            தெளிவின் ஆவியானவர் தேடி வந்தீர் - 2

            பொய்யான காரியங்கள் என்னை இழுக்கப் பார்க்குதே -2

            உண்மைக்கு உருவம் நீர் எனை இழுத்துக்கொள்ளுமே - நீர்

 

 

- Altrin SH.

 

 

https://www.youtube.com/watch?v=Vv9_w6XLGAg

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...